தப்பி ஓடிய நான்கு சிறுவர்கள் கைது

தப்பி ஓடிய நான்கு சிறுவர்கள் கைது
சிறுவர்கள் கைது
குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டோர், அரசு கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படுகின்றனர். இத்தகைய அரசு கூர்நோக்கு இல்லம் திருநெல்வேலியில் அமைந்துள்ள நிலையில் இன்று (ஜனவரி 14) பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை தள்ளி விட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறுவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.
Next Story