ராமநாதபுரம் அதிமுக ஸ்டாலின் சமத்துவ பொங்கல் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |14 Jan 2025 9:42 AM GMT
முதுகுளத்தூர் அருகே அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மருதகம் கிராமத்தில் அதிமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா, மாட்டுப் பொங்கல் விழா வில் மாவட்டக் கழகச் செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டி , முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் SD.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சமத்துவ பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமிக்கு கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். பின்பு பொங்கல் பண்டிகையொட்டி மாட்டுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் என் இனிப்பு பொங்கல் கரும்புகளை அதிமுக நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருதகம் கிளைக் கழகச் செயலாளர் தர்மர் செய்திருந்தார்.
Next Story