புத்தளம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

புத்தளம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகுதி புத்தளம் அருகே உள்ள அரியபெருமாள்விளை காலனியை சேர்ந்தவர் அரிசந்திரன் (57).  விவசாயி. இவர் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் அவருக்கு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் எப்போதும் சாக வேண்டும் என வீட்டில் சொல்லி வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி வீட்டில் ஏதோ விஷம் மருந்தை சாப்பிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.       சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி  நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி விஜி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story