ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
பாதாள செம்பு முருகன் கோவிலில் தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் கோவிலில் இன்று தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பாதாள செம்பு முருகன் அருள் பெற்று சென்றனர் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா, கேரளா, உத்திர பிரதேசம் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பாதாள செம்பு முருகனுக்கு கருங்காலி மாலை வாங்கி சாற்றி சாமி தரிசனம் செய்தனர். இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாதாள செம்பு முருகன் கோவிலில் சிறப்பு அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story