ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் பலி

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் பலி
மதுரை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலியானார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.14) காலை ஆறு மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை ஒன்பதாவது சுற்றில் கலந்து கொண்ட விளாங்குடி சொக்கநாதபுரத்தை சேர்ந்த நவீன் (23) என்ற மாடுபிடிவீரர் மார்பில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 மாடுபிடி வீரர்கள் 28 பேர்கள் மாட்டின் உரிமையாளர்கள் 8 பேர்கள் பார்வையாளர்கள் 17 பேர்கள் ஆகும் .
Next Story