கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா
Nagercoil King 24x7 |14 Jan 2025 11:19 AM GMT
குமரி
குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 14-ம் தேதி கருங்கல் பேருந்து நிலையத்தில் வைத்து பொங்கல் . விழா நடைபெற்றது. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ தலைமை வகித்தார். கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், கருங்கல் பேரூர் காங்கிரஸ் தலைவர் குமரேசன், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சக்கரை பொங்கல், மற்றும் மரக்கன்றுகள் வழங்கபட்டது.
Next Story