ஆடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் பலி
Thanjavur King 24x7 |14 Jan 2025 12:05 PM GMT
கிரைம்
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ஜாமியா நகர் பகுதியைச் சேர்ந்தஹபிப் ரஹ்மான் மகன் முகமது சபிர் (வயது 14). இவர் ஆவணியாபுரம் கிரசன்ட்மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது நண்பர்கள் முகமது நபீஸ், சந்தோஷ், ஹபிப் ரகுமான், தஸ்லீம் ஆகியோருடன் சேர்ந்து காரைக்கால் மெயின் ரோடு பனங்காட்டங்குடி நாட்டார் பாலம் அருகே குளிக்க சென் றுள்ளான். அப்போது முகமது சபீர் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவனின் உறவினர்கள் நாட்டாற்றில் முகமது சபீரை தேடினர் அப்போது முகமது சபீர் இறந்த நிலையில் மீட்கப்பட்டான். தகவல் அறிந்ததும் மாணவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story