புது கஞ்சமனூர்- சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.

புது கஞ்சமனூர்- சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
புது கஞ்சமனூர்- சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், ராசாபட்டியன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா வயது 61. இவர் ஜனவரி 11ம் தேதி காலை 9 மணி அளவில், ஜெகதாபி - உப்பிடமங்கலம் சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் புது கஞ்சமனூர் பஸ் ஸ்டாப் அருகே சாலையைக் கடக்க சென்றபோது, அதே சாலையில் ஜெகதாபி,அல்லாளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், கருப்பையா ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருப்பையாவை மீட்டு, கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கருப்பையா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விக்னேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story