உதகை கோத்தகிரி, குந்தா,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்தும் கடும் குளிர் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதி.................
Nilgiris King 24x7 |14 Jan 2025 1:46 PM GMT
உதகை கோத்தகிரி, குந்தா,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்தும் கடும் குளிர் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதி.................
உதகை கோத்தகிரி, குந்தா,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்அடர்ந்த மேகமூட்டம் சூழ்ந்தும் கடும் குளிர் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதி................. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீர் பணி மற்றும் உரைப்பணி தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று இரவு லேசான மழை பெய்து வந்தது இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து உதகை மற்றும் குந்தா, கோத்தகிரி, சுற்றுவட்டார பகுதிகளில் இரவு லேசானமழை பெய்தது இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேக மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் உதகையிலிருந்து, கோத்தகிரி குன்னூர், மஞ்சூர் செல்லும் சாலை மற்றும் உதகையிலிருந்து தொட்டபெட்டா செல்லும் மலைப்பாதையில் காலை முதல் கடும் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால் மலைப்பாதையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றனர். கடுமையான மேகமூட்டத்தால் குந்தா, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் வெண்மை நிறமாக காட்சியளித்தது கடும் மேகமூட்டத்துடன் கூடிய கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளன
Next Story