கரூர் காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

கரூர் காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
கரூர் காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். கரூர் காவல் நிலையத்தில் காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. காவல் நிலையம் முன்பு வண்ண வண்ண கோலம் இட்டு ,மண்பானை வைத்து பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பொங்கல் வைத்தனர். கரூர் நகர் காவல் நிலைய காவலர்கள் அனைவரும் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழா கொண்டாடினர். இந்நிகழ்வில் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன்,உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
Next Story