அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை.

அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை.
அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பரமத்திவேலூர், ஜன.14: நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் படுகை அணை கட்டி இராஜவாய்க்கால் அமைத்து பாசன வசதிகள் ஏற்படுத்திய, மன்னர் அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில், அவரது திருவுருவச் சிலைக்கு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மன்னர் கட்டிய கோட்டையை சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் பேட்டி நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டி, அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இராஜ வாய்க்கால் அமைத்து, பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு வழிவகை செய்த மன்னர் அல்லாள இளைய நாயக்கருக்கு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அவரது பிறந்த நாளான தை 1-ம் தேதி இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் மாநில ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன்‌, மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா தலைமையில், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் S.M. மதுரா செந்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். இராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளான தை திங்கள் 1-ம் நாள் அரசு விழாவை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அல்லாள இளைய நாயக்கரின் வாரிசுதாரர்களுக்கு, அமைச்சர் மா. மதிவேந்தன்‌ பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா. மதிவேந்தன், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அளித்த அறிவிப்பின்படி இன்று அல்லாள இளைய நாயகருக்கு குவி மாடத்துடன் கூடிய திரு உருவச்சிலை அமைத்து, அவரது பிறந்த நாளான தை 1-ம் நாள் அரசு விழாவாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாமன்னருக்கு சிலை நிறுவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. பரமத்தி-வேலூர் ஆட்சி செய்த மன்னர் அல்லாளர் இளைய விநாயகர் 400 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் ராஜவால் வாய்க்காலை அமைத்தவர். இதனால் பல்லாயிரம் ஏக்கர் விவசாயம் நீர்ப்பாசனம் ஆதாரமாக உள்ளது. விவசாயம் குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்த மன்னருக்கு, திமுக அரசு அரசு விழா எடுத்துள்ளது. அந்த மன்னரின் வழித்தோன்றலாக வந்தவர்கள் கொடுத்த கோரிக்கையின்படி, பரமத்தியில் மன்னர் அல்லாள நாயக்கர் கட்டி எழுப்பிய மண் கோட்டை சிதிலமடைந்துள்ளது. இதனை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா. மதிவேந்தன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் சே. சுகந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே. இராம்குமார், பரமத்தி வட்டாட்சியர் பி.முத்துக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இராஜேந்திரபிரசாத், எஸ்.மலர்விழி, அட்மா குழுத்தலைவர்கள் சண்முகம், தானராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story