பொங்கல் பண்டிகையை மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்த அமைச்சர் தங்கம் தென்னரசு*
பொங்கல் பண்டிகையை மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்த அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைத்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் அமைந்துள்ள காந்தி மைதானம் மற்றும் மேலரத வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். அங்கிருந்த பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்ததை பகிர்ந்து கொண்ட அமைச்சர் சிறுவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அவரோடு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடனிருந்தார்.
Next Story



