சத்தியமங்கலம் காவல் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு வெகு விமர்சையாக கொண்டாடினர்
சத்தியமங்கலம் காவல் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு வெகு விமர்சையாக கொண்டாடினர் சத்தியமங்கலம் காவல் துறை சார்பில் அத்தாணி ரோட்டில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹர், சத்தியமங்கலம் டி.எஸ்.பி சரவணன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சத்தி நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி மற்றும் அனைத்து துறை போலீசாரும் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலிட்டு இறைவனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாணவிகள் நாட்டிய நிகழ்ச்சி, சிலம்பாட்டம், பானை உடைத்தல் போட்டி, மிதவேக மிதிவண்டி போட்டி, கயிறு இழுத்தல் , உள்ளிட்ட போட்டிகளில் காவல் அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், குழந்தைகள் ஆர்வத்துடன் மற்றும் கலந்து கொண்டு விளையாடினர். தொடர்ந்து பானை எடுக்கும் போட்டியில்ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹர், முதலாவதாக பானை உடைத்தார் விழாவையொட்டி நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஜவஹர் பரிசுகள் வழங்கினார்.
Next Story



