மாடுகளுக்கு மூக்கணாம் கயிறு விற்பனை விறு விறு
Tiruvallur King 24x7 |14 Jan 2025 2:59 PM GMT
குழந்தைகள் பெண்களுக்கு துணிமணிகள் எடுப்பது போன்று மாடுகளுக்கு மூக்கணாம் கயிறு திருஷ்டி கயிறு மணி சலங்கை சங்குகளை வீட்டில் உள்ள பெண்களுடன் வந்து ஆர்வத்துடன் வாங்கி சென்ற விவசாயிகள்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கயிறு, மணி, சலங்கை போன்ற அலங்காரப் பொருட்களின் விற்பனை விறு விறு ப்பாக நடைபெற்றது: வீட்டில் உள்ள குழந்தைகள் பெண்களுக்கு துணிமணிகள் எடுப்பது போன்று மாடுகளுக்கு மூக்கணாம் கயிறு திருஷ்டி கயிறு கயிறு மணி சலங்கை சங்குகளை வீட்டில் உள்ள பெண்களுடன் வந்து ஆர்வத்துடன் வாங்கி சென்ற விவசாயிகள் மாடுகளுக்கு கயிறு, மணி, சலங்கை விற்பனை மும்முறமாக திருவள்ளூரில் உள்ள கலைச்சங்கம் மைதானத்தின் அருகே அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாட்டுக் கயிறுகள் விற்பனை செய்யும் கடைகளில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கயிறு, மணி, சலங்கை போன்ற அலங்காரப் பொருட்களின் விற்பனை கனஜோராக நடைபெற்றது. திருவள்ளூரில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கயிறு, மணி, சலங்கை போன்ற அலங்காரப் பொருட்களின் விற்பனை தீவிரமாக நடக்கிறது. பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், தை மாதத்தின் இரண்டாம் நாளில், நாளை கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் படையலிட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. அத்துடன், கோயில்களில் உள்ள கோ சாலைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.. திருவள்ளூர் கலைச்செல்வம் மைதானத்தின் அருகே நாமக்கல் ஈரோடு சேலம் சுற்றுவட்டார வியாபாரிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கயிறு விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர் இங்கு சங்கு கயிறு 40 ரூபாய் தாம்பு கயிறு அறுபது ரூபாய் மூக்கணாங் கயிறு 80 ரூபாய் பித்தளை சலங்கை கயிறு என கயிறுகளின் நீளத்திற்கு தரத்திற்கு ஏற்ப விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது ஆர்வத்துடன் திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் உள்ள கீழானுர் மெய்யூர் தேவாங்கவாக்கம் வேப்பம்பட்டு செவ்வாய்பேட்டை தாமரைப்பாக்கம் ஈக்காடு காக்கலூர் புட்லூர் மணவாளநகர் ஒதிக்காடு திருப்பாச்சூர் பூண்டி மேல்நல்லாத்தூர் கீழ் நல்லாத்தூர் தலகாஞ்சேரி எடப்பாலயம் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் தங்களது கால்நடைகளுக்கு கயிறு சலங்கை சங்கு கயிறுகளை வாங்கிச் சென்றனர்
Next Story