ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2024-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டுள்ளார்.
Next Story