அல்லாள இளைய நாயக்கரின் சிதிலமடைந்த மண் கோட்டையை தொல்லியல் துறை மூலம் சீரமைத்து மாபெரும் விழா எடுக்க பாஜக நடவடிக்கை எடுக்கும்!-பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.இராமலிங்கம்
Namakkal King 24x7 |14 Jan 2025 3:40 PM GMT
பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான டாக்டர் கே.பி.இராமலிங்கம் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் பகுதியில் படுகை அணை அருகே அமைந்துள்ள மாமன்னர் அல்லாள இளைய நாயக்கரின் குவி மாடத்தில், அம்மன்னரின் பிறந்தநாள் விழா, தைத் திங்கள் 1-ம் நாள், அரசு விழாவாக இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாஜக சார்பில், ஜேடர்பாளையம் படுகை அணை அருகே, மன்னரின் திருஉருவச்சிலையுள்ள குவி மாடத்தில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான டாக்டர் கே.பி. இராமலிங்கம் மன்னர் அல்லாள இளைய நாயக்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாஜகவினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.அப்போது *மன்னர் அல்லாள இளைய நாயக்கரின் பரம்பரையை சேர்ந்த பட்டக்காரர் சோமசுந்தரம் என்பவருக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த வாழ்த்துச் செய்தியை வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து, மன்னரின் பரம்பரையினர் அளித்த கோரிக்கை மனுவையும் இராமலிங்கம் பெற்றுக் கொண்டார்இதனைத் தொடர்ந்து படுகைஅணை வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் டாக்டர் கே.பி.இராமலிங்கம், மாமன்னர் அல்லாள இளைய நாயகர் வரலாற்றை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான தை 1-ம் நாளை அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் கொண்டாடுகிறார்கள். மன்னரின் வாரிசுதாரரின் கோரிக்கையான பரமத்தியில் உள்ள மன்னர் அல்லாள இளைய நாயகர் எழுப்பிய, தற்போது சிதலமடைந்த நிலையில் உள்ள மண் கோட்டையை புதுப்பித்து நினைவு சின்னமாக உருவாக்கிட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிட பாரதிய ஜனதா கட்சி பெரு முயற்சி எடுக்கும்.மத்திய அரசின் தொல்லியல் துறை மூலமாக அதற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்து, வரலாற்றுச் சின்னமாக உருவாக்குவதற்கு பாஜக உறுதுணையாக இருக்கும். இந்த 2025-ம் ஆண்டுமுதல், அல்லாள இளைய நாயக்கருக்கு அரசு விழா எடுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே பி இராமலிங்கம், சங்க காலம், அதற்கு முன்பாக இருந்தும் தமிழகத்தை பல மன்னர்கள் சிறப்பாக ஆட்சி செய்தார்கள். அந்த வகையில் மன்னர் அல்லாள இளைய நாயக்கரைப் பொருத்தவரை சேவை மனப்பான்மையோடு அவரது ஆட்சி காலத்தில், ஜேடர்பாளையத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே படுகை அணையை அமைத்தார். இப்பகுதி இன்று நீர் வளத்தோடு திகழ்வதற்கு மன்னர் அமைத்த இந்த படுகை அணை பெரிதும் பயன்படுகிறது. இதன் மூலம் ராஜவாய்க்கால் அமைத்து 16 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மன்னரால் மட்டுமே இவ்வளவு பெரிய படுகை அணையை கட்ட முடிந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அல்லாள இளைய நாயக்கருக்கு அதிமுக ஆட்சியில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது திமுக ஆட்சியில், செயல்படுத்தப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களில் அல்லாள இளைய நாயக்கர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக உள்ளார். இவருக்கு விழா எடுக்க அதிமுக ஆட்சியில் முன்னெடுப்பு செய்தார்கள். அவர்கள் அறிவித்தார்கள் நாங்கள் ஏன் செய்ய வேண்டும் எனக்கூறி புறக்கணிக்காமல் தொடர்ந்து செயல்பட்டுள்ள இந்த ஆளும் கட்சி அரசுக்கும் பாராட்டு தெரிவிப்பதாகவும் கே.பி. இராமலிங்கம் கூறினார்.மேலும், இப்பகுதியில் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கருக்கு,கோட்டை அமைத்து அதில் அரசு விழா நடத்தினால் இன்னும் சிறப்பாக அமையும்.பாளையங்கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை சீரமைக்கப்பட்டு, நினைவுச் சின்னமாக கோட்டை அமைத்து அங்கு விழா நடப்பதை போலவும், பூம்புகாரில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது போலவும், இங்கேயும் பரமத்தியில் சிதிலமடைந்து உள்ள மன்னரின் மண்கோட்டையை சீரமைத்து கோட்டை அமைத்து, விழா நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசின் மூலம் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதனை பாஜக மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் சத்தியமூர்த்தி, இராஜேஸ்குமார், கபிலர்மலை வடக்கு ஒன்றிய தலைவர் பூபதி, கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் செல்வராஜூ,சசி தேவி, அருண், வரதராஜ், பழனியப்பன், சுபாஷ், வடிவேல், பத்மராஜன்,நாமக்கல் நகர முன்னாள் தலைவர் சரவணன், நாமக்கல் நகரத் தலைவர் தினேஷ், பாஜக நிர்வாகிகள் வடிவேல், பத்மநாபன், உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story