வார சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்

காரிமங்கலம் வார சந்தையில் 3.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுவது வழக்கம் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏளமான விவசாய மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர் மேலும் நேற்று நடந்த சந்தையில், 3200 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ரூ. 3 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானது. 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் 70 லட்சம் அளவிற்கு மாடுகள் விற்பனை நடந்தது. நாட்டுக்கோழி விற்பனை 5லட்சம் அளவில் இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளின் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story