பி . டி . ஓ ., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
Kallakurichi King 24x7 |15 Jan 2025 3:58 AM GMT
பொங்கல்
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மன் விமலா முருகன், பி.டி.ஓ.,க்கள் சங்கரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷபி, பார்வதி, பழனிவேல் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story