சாகை வார்த்தல் விழா

சாகை வார்த்தல் விழா
விழா
கள்ளக்குறிச்சி, மந்தைவெளி, முத்துமாரியம்மன் கோவிலில் போகி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கூழ் குடம் எடுத்து வந்து முத்துமாரியம்மனுக்கு படையலிட்டனர். மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு உற்சவர் அம்மன் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.
Next Story