காதலி கண்முன் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து காதலனும் தற்கொலை
Dindigul King 24x7 |15 Jan 2025 5:11 AM GMT
வரம்புமீறிய உறவு..! காதலி கண்முன் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து காதலனும் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் கிராமத்தில் ஒரு தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் பெண் சடலம் கிடப்பதாக நிலக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலத்தையும் அதன் அருகே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு கையில் கத்தியுடன் கிடந்த ஆணின் சடலத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். முதல் கட்ட விசாரணையில் பீக்கங்காய் தோட்டத்தில் பிணமாக கிடந்தது மைக்கேல் பாளையம் கிராமத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவர் மனைவி ஆலிஸ் என்பதும், மற்றொருவர் கோட்டூர் சமத்துவ புரத்தை சேர்ந்த ஜெபஸ்டின் ஜீவா என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கணவர் சகாயராஜ் பெங்களூரில் உள்ள கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகாத இளைஞர் ஜெபஸ்டின் ஜீவாவுக்கும் ஆலிஸிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் வரம்பு மீறிய உறவாக மாறியுள்ளது, இந்த கள்ளக்காதல் ஜோடிகள் உல்லாச வாழ்க்கை வாழ தொடங்கியுள்ளனர். இவர்களின் வரம்பு மீறிய உறவு மெல்ல மெல்ல ஆலிஸ் கணவர் சகாயராஜ்க்கு தெரிய வரவே 10 வயதில் மகன் இருக்கும் நிலையில், இந்த உறவு வேண்டாம் என மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் ஆலிஸ் காதலை கைவிட மறுத்துள்ளார். இந்நிலையில் காதலுக்கு இடையூறு வருவதை எண்ணிய இருவரும் தங்கள் வழக்கம் போல் சந்தித்துக் கொள்ளும் பீக்கங்காய் தோட்டத்திற்கு சென்று உள்ளனர். அங்கு மனம் உடைந்து ஆலிஸ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்முன்னே காதலி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த ஜெபஸ்டின் ஜீவா தனது மோட்டார் பைக் கீ செயினில் இருந்த சிறிய கத்தி எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டு அவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. நிலக்கோட்டை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு பேர் உடல்களும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற் கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story