தேசிய மல்லர் கம்பத்தில் சாதித்த வீரர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

X
மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்ப போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அணி சார்பில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முத்தரசி, ரீனா, பிரணீத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த வீரர்கள் குழு போட்டியில் 3வது இடத்தையும், மாணவி மதிவதனி தனிநபர் பிரிவில் 3வது இடத்தையும், குழு போட்டியில் 2வது இடத்தையும், அகிலன் குழு போட்டியில் 3வது இடத்தையும் பிடித்தனர்.இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.தொடர்ந்து, தேசிய அளவில் பல்கலை கழகங்களுக்கு இடையே நடந்த மல்லர் கம்பம் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேப்பியார் பல்கலை., மாணவர்கள் பிரவீன்குமார், ஆகாஷ், யஷ்வந்த், நிதிஷ், யதிஷ் ரான் ஆகியோர் குழு போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தனர். சஞ்சய் தனிநபர் பிரிவில் 2வது இடத்தை பிடித்தார்.விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்த வீரர், வீராங்கனைகள் தாங்கள் பெற்ற பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் பழனியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
Next Story

