விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பரிசுகள் வழங்கினார்*

திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பரிசுகள் வழங்கினார்*
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பரிசுகள் வழங்கினார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் இன்று தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் கபடி, கோல போட்டிகள், ஓட்ட போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மாலை வேளையில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மற்றும் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆத்திபட்டி பகுதியைச் சேர்ந்த தேமுதிக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர் அவர்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story