மாட்டுப் பொங்கல் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடு வளர்ப்போர்
Virudhunagar King 24x7 |15 Jan 2025 7:06 AM GMT
மாட்டுப் பொங்கல் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடு வளர்ப்போர்
விருதுநகர் பாரதியார் தெருவில் வசிப்பவர் சரவணன் இவர் கடந்த 25 ஆண்டுகளாக பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 15 மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வரும் இவர் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று தனது வீட்டில் உள்ள பசு மாடுகளை தனது தங்கை குடும்பத்தினருடன் காலை ஐந்து மணிக்கு எழுந்து குளிப்பாட்டி மாடுகளுக்கு மாலை அணிவித்து சந்தனம் குங்குமம் இட்டு மாட்டு தொழுவத்தில் பொங்கல் இட்டு வழிபாடு நடத்துவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு தனது வளக்கும் 15 மாடுகளை காலையில் 5 மணிக்கு எழுந்து மாடுகளை குளிப்பாட்டி மாடுகளை அலங்கரித்து தனது தொழுவத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். இந்த வழிபாட்டின் போது இவருடைய தங்கை குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளும் கலந்து கொண்டனர் இவருடைய தங்கை மகள் பள்ளியில் படிக்கும் சிறுமி ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஆர்வத்துடன் திருமங்கலத்தில் இருந்து விருதுநகரில் உள்ள இவருடைய இல்லத்திற்கு வந்து மாடுகளை குளிப்பாட்டுவதிலிருந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல் கரும்பு வழங்குவது என மாட்டுப்பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினர்
Next Story