பொள்ளாச்சி: வண்ணமயமான வானில் பறக்கும் கனவு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா கோலாகலமாக துவங்கியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 12 பிரம்மாண்ட பலூன்கள் பொள்ளாச்சி வானை வண்ணமயமாக்கின. அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பைலட்டுகள், அதிகாலையில் இருந்தே பலூன்களை தயார் செய்தனர். பின்னர், ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து வானில் பறக்க விடப்பட்ட பலூன்கள், பொள்ளாச்சி வானில் அழகிய காட்சியை வழங்கின. இந்த நிகழ்ச்சியை காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சிக்கு குவிந்தனர். குறிப்பாக, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, இந்த திருவிழா பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திருவிழா ஜனவரி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொள்ளாச்சி வானில் பறக்கும் பலூன்களை காண விரும்புவோர் இந்த நாட்களில் பொள்ளாச்சிக்கு வருகை தரலாம்.
Next Story