திருவள்ளுவர் தினத்தில் திருக்குறளை ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசமாக வழங்கிய கல்லூரியின் தாளாளர்.

திருவள்ளுவர் தினத்தில் திருக்குறளை ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசமாக வழங்கிய கல்லூரியின் தாளாளர்.
திருவள்ளுவர் தினத்தில் திருக்குறளை ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசமாக வழங்கிய கல்லூரியின் தாளாளர். கரூர்- திண்டுக்கல் சாலையில் மலைக்கோவிலூர் அருகே பெட்ரோல் பங்க் நிறுவனமும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியையும் நடத்தி வருபவர் செங்குட்டுவன். கடந்த ஏழு ஆண்டுகளாக வருடம் தோறும் திருவள்ளுவர் தினத்தன்று இவரது பெட்ரோல் பங்கிற்கு நேரடியாக வந்து 10 குறள்களை ஒப்புவிக்கும் மாணாக்கர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி வருகிறார். நடப்பாண்டிலும் இன்றைய தினம் காலை முதல் மாலை வரை பெட்ரோல் பங்கிற்கு வந்து 10- குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கரூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பங்கிற்கு மாணவர்கள் பெற்றோருடன் வந்து குறளை ஒப்புவித்து ஒரு லிட்டர் பெட்ரோலை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் சுப்பிரமணியன் உடன் இருந்தார்.
Next Story