திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தர்மபுரி மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடி வரும் சூழலில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, திமுக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் கிராமத்தில் இன்று ஜனவரி 15 திமுக கிளை சார்பில் "சமத்துவ பொங்கல் விழா" ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மாதேஸ் ஏற்பாட்டில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடினர். இதில் பெண்கள் குழந்தைகள் ஊர்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story