திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா: மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் 

திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா: மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் 
திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 178-ஆவது ஆராதனை விழாவினை, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திருவையாறில் ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்ஸவ சபா சார்பில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழா  (14.01.2025) ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் (18 .01.2025)ஆம் தேதி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பரத்சுந்தர் பாட்டு, 6.20 மணிக்கு நிர்மலா ராஜசேகர் வீணை, 6.40 மணிக்கு குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா பாட்டு, 7 மணிக்கு பெங்களூரு சுமா சுதீந்திரா வீணை, 7.20 மணிக்கு பாபநாசம் அசோக் ரமணி பாட்டு, 8 மணிக்கு மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா பாட்டு உள்பட இரவு 10மணி வரை மொத்தம் 13 இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஜனவரி 15 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் இவ்விழாவில் இரவு 7 மணிக்கு ராஜேஷ் வைத்யா வீணை, 7.20 மணிக்கு ஏல்லா ஸ்ரீவாணி வீணை, 7.40 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ் பாட்டு, 8 மணிக்கு கர்நாடக சகோதரர்கள் கே.என்.சசிகிரண், பி.கணேஷ் பாட்டு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஜனவரி 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் இவ்விழாவில் இரவு 7 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன், 7.20 மணிக்கு சிக்கில் மாலா சந்திரசேகர், 8 மணிக்கு ஜெயந்தி குமரேஷ் வீணை, 8.20 மணிக்கு சந்தீப் நாராயண் பாட்டு, 8.40 மணிக்கு கணேஷ், குமரேஷ் வீணை இரட்டையர், 9 மணிக்கு காயத்ரி கிரிஷ் பாட்டு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஜனவரி 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் இவ்விழாவில் மாலை 6.20 மணிக்கு ஷேக் மெகபூப் சுபானி, காலிஷாபி மெகபூப், பெரோஷ் பாபு நாகசுரம், 6.40 மணிக்கு திருப்பாம்புரம் சகோதரர்கள் டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம், டி.கே.எஸ். சேஷகோபாலன் நாகசுரம், 7.20 மணிக்கு மஹதி பாட்டு, 8 மணிக்கு சுதா ரகுநாதன் பாட்டு, 8.20 மணிக்கு ரவிகிரண் சித்ர வீணை, 9.20 மணிக்கு திருவனந்தபுரம் கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் பாட்டு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது ஜனவரி 18 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 9-மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள்.  முன்னதாக, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து தியாகராஜர் சுவாமிகள் சிலை ஊர்வலமாக உஞ்சவர்த்தனி பஜனையுடன் புறப்பட்டு விழா பந்தலை அடைகிறது. அப்பொழுது சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 10.30 மணிக்கு சுசித்ரா குழுவினரின் ஹரிகதை, இரவு 7.20 மணிக்கு கடலூர் எஸ்.ஜெ. ஜனனி பாட்டு, இரவு 8 மணிக்கு தியாகராஜர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெறுகிறரு. 8 மணிக்கு சிக்கில் குருசரண் பாட்டு, 8.20 மணிக்கு பிரபஞ்சம் பாலச்சந்திரன் புல்லாங்குழல், தேசிய நிகழ்ச்சிகளான இரவு 9.30 மணிக்கு ஓ.எஸ். அருண் பாட்டு, 10.15 மணிக்கு நாகை முரளிதரன், புதுக்கோட்டை அம்பிகா பிரசாத், பத்ரிநாராயணன் வயலின் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Next Story