கோவை: சாலை விபத்தில் முதியவர் பலி !

கோவை: சாலை விபத்தில் முதியவர் பலி !
கோவை,தடாகம் சாலை, இடையர்பாளையம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 64 வயதான செல்வகுமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை,தடாகம் சாலை, இடையர்பாளையம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 64 வயதான செல்வகுமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இன்று அதிகாலை, இடையர்பாளையம் சந்திப்பில் நடந்து சென்ற செல்வகுமார் மீது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இடையர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர் ஆசிக் (21) என்பவரை கைது செய்துள்ளனர்.
Next Story