பெத்தநாடார் பட்டி அருகே கோவிலில் பூக்குழி திருவிழா
Sankarankoil King 24x7 |15 Jan 2025 12:00 PM GMT
கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஒன்றியம், பெத்தநாடார் பட்டி ஊராட்சி அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த பூக்குழி திருவிழாவில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் கோவில் தர்மகர்த்தா சிவன் பாண்டி தலைமையில் பூக்குழி இறங்கினர். இதில் அழகு முத்துமாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இவ்விழாவை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.
Next Story