கலிங்கப்பட்டியில் மதிமுக கட்சியின் இளைஞரணி கூட்டம் நடைபெற்றது

கலிங்கப்பட்டியில் மதிமுக கட்சியின் இளைஞரணி கூட்டம் நடைபெற்றது
மதிமுக கட்சியின் இளைஞரணி கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் நெல்லை மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் கூட்டம், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மாரிமுருகன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கலிங்கப்பட்டி தலைவர் வைகோ அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. மண்டலத்துக்கு உட்பட்ட 10 கழக மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி பேரூர்க்கழகங்களில் அமைப்பாளர், துணை அமைப்பாளர் களை முழுமையாக விரைந்து நியமித்திட மாவட்டச் செயலாளர்கள் மூலம் பரிந்துரைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நான், இளைஞர் அணியின் கடமைகள், பொறுப்புகள், வேலைகளை எவ்வாறு முறைப்படுத்தி செய்வது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.. இதில் ஒன்றியச் செயலாளர் ஜே.பி.சிங், மாவட்டச் செயலாளர்கள் இல சுதா பாலசுப்பிரமணியன், பு வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் கொண்டவர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story