விலை உயர்வு

விலை உயர்வு
பூவன் வாழைத்தார் விலை உயர்வு
புன்செய்புளியம்பட்டி மார்க் கெட்டில், பொங்கல் பண்டி கையால் வாழைத்தார் விலை நேற்று உயர்ந்தது. பூவன் ரகம் ஒரு தார், 500 ரூபாய், ரஸ்தாளி, 600 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த வாரங்களில், 18 கிலோ எடை கொண்ட பூவன் வாழைத்தார், 300 ரூபாய்க்கு விற்ற நிலையில், 500 ரூபாய்க்கு விற்ப னையானது. வியாபாரிகள் கூறியதா வது: கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார் வரத்து அதிகரித் துள்ளது. பொங்கல் பண்டிகை என் பதால் விலையும் உயர்ந்தது. கடந்த வாரத்தை விட, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பூவன் வரத்து அதிகரித்தாலும், விலையும் உயர்ந்தது. இவ்வாறு கூறினர்.
Next Story