குதிரைகளுக்கு பொங்கல் படைத்துக் கொண்டாட்டம்

குதிரைகளுக்கு பொங்கல் படைத்துக் கொண்டாட்டம்
திண்டுக்கல் சிறுமலை பிரிவு அருகே மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு குதிரைகளுக்கு பொங்கல் படைத்துக் கொண்டாட்டம்
திண்டுக்கல் சிறுமலை பிரிவு அருகே அலங்கார குதிரை பண்ணை வைத்து பயிற்சி குதிரைகள் 10 மேற்பட்டவைகள் பாண்டியன் என்பவர் வளர்த்து வருகிறார். இன்று மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தங்களது குதிரைகளுக்கு பொங்கல் வைத்து குதிரை பொங்கல் உற்சாகமாக கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. குதிரைகளை குளிப்பாட்டி சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து பூ மாலை அணிவித்து சுவாமிக்கு பொங்கல் படைத்து குதிரைகளுக்கு பொங்கல் உணவாக அளித்து மற்றும் கரும்பு ஊட்டப்பட்டது. தங்கள் வாழ்வாதாரமாக திகழும் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து படையல் யிட்டு வழிபாடு செய்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
Next Story