தக்கலை : கடிதம் எழுதி வைத்து கடைக்காரர் தற்கொலை

தக்கலை : கடிதம் எழுதி வைத்து கடைக்காரர் தற்கொலை
குமரி
குமரி மாவட்டம் தக்கலை அன்பு நகரை சேர்ந்தவர் நியூமன்வெல்ஸ் பங்கிராஜ் (52). இவர் மளிகை கடை நடத்தி வந்தார்.  இவரது மனைவி சுஜா ஜாஸ்மின். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக நியூமன் வெல்ஸ் பங்கிராஜ் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தக்கலை போலீசார் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.       இதற்கு இடையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.  அந்த கடிதத்தில் குறிப்பிட்ட மூன்று பேர் நியூமன் வெல்ஸ் கடைக்கு வந்து அவரது ரப்பர் சீட்டுகளை திருடி வந்ததாகவும், அதை தட்டி கேட்டதால் மூன்று பேர் தன்னை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி  தற்கொலை செய்து  கொள்வதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story