குமரி : மாநிலம் தழுவிய மாபெரும் மாட்டு வண்டி போட்டி
Nagercoil King 24x7 |15 Jan 2025 1:55 PM GMT
செண்பகராமன் புதூர்
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 33 வது ஆண்டு பொங்கல் விழா மற்றும் மாபெரும் மாநிலம் தழுவிய மாட்டுவண்டி போட்டி இன்று 15-ம் தேதி மாலை நடைபெற்றது. ஆரல்வாய்மொழி -நெடுமாங்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி பழத்தோட்டம் அருகே இருந்து செண்பகராமன்புதூர் மரப்பாலம் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது இப்போட்டியில் 33 பெரிய தட்டு வண்டியும், 16 வில் வண்டியும், இரண்டு பற்களுக்கு உட்பட்ட காளைகள் மட்டும் பங்கு பெறுகின்ற 11 சின்ன தட்டு வண்டியும் போட்டியில் பங்கு பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாசுந்தரம் கலந்து கொண்டு வில்வண்டி போட்டியினையும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் சிறிய தட்டு வண்டி போட்டியினையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். செம்பகராமண்புதூரில் நடைபெற்ற மாநிலம் தழுவிய மாட்டுவண்டி போட்டியில் பொதுமக்கள் எந்த வித பாதிப்பு இல்லாமல் மாட்டு வண்டி போட்டியினை காணும் விதத்தில் நிர்வாகத்தின் சார்பில் சாலையின் இரவு ஓரத்திலும் கம்பு மூலம் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.
Next Story