எழுதியாம்பட்டி-கண் அறுவை சிகிச்சை முடித்தும் குணமாகாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.
Karur King 24x7 |15 Jan 2025 2:01 PM GMT
எழுதியாம்பட்டி-கண் அறுவை சிகிச்சை முடித்தும் குணமாகாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.
எழுதியாம்பட்டி-கண் அறுவை சிகிச்சை முடித்தும் குணமாகாததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, எழுதியா பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி வயது 51. இவருக்கு கண் பார்வையில் குறைபாடு இருந்ததால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகும் அவருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. இதனால் மன விரக்தியோடு வாழ்ந்து வந்த பாலசுப்பிரமணி ஜனவரி 7ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி இளஞ்சியம் வயது 45 என்பவர்,தனது கணவனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த பாலசுப்பிரமணி ஜனவரி 13ஆம் தேதி இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து இளைஞ்சியம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த பாலசுப்பிரமணியன் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story