நடையனூரில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் பெண்கள் ஆர்வம்.

நடையனூரில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் பெண்கள் ஆர்வம்.
நடையனூரில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் பெண்கள் ஆர்வம். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்,நடையனூர் அருகே உள்ள இளங்கோ நகரில், பிரண்ட்ஸ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இருபதாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இங்கு பாரம்பரிய தமிழர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் (ஸ்பூன் லெமன்) என்ற விளையாட்டில் பங்கேற்றனர். இந்த விளையாட்டில் வாயில் சிறிய அளவிலான தேக்கரண்டியை வைத்து,அதன் மீது எலுமிச்சம் பழத்தை வைத்து குறிப்பிட்ட தூரத்தை எலுமிச்சம் பழம் கீழ விழாமல் சென்றடைய வேண்டும். இந்த போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று எலுமிச்சை பழம் கீழ விழாமல் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சென்றது அனைவரையும் கவர்ந்தது. போட்டியில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு விழா குழுவின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
Next Story