தை திருநாளை முன்னிட்டு சாத்தூரில் மணல் மேடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது

தை திருநாளை முன்னிட்டு சாத்தூரில் மணல் மேடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது
தை திருநாளை முன்னிட்டு சாத்தூரில் மணல் மேடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றங்கரையில் மணல் மேடு திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் ஆண்டு தோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள பொது மக்கள் ஒன்று கூடி இந்த விழாவை கொண்டாடுவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தாங்கள் கொண்டு வந்த உணவுகளை மற்றவருக்கும் பரிமாறி உண்டும். ஒவ்வொருவரும் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டும் பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, கண்ணாமூச்சி , பாண்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு களை விளையாடி மகிழ்ந்தனர். இந்த மணல்மேடு திருவிழா நிகழ்ச்சியில் குடும்பத்துடன் அனைவரும் கலந்து கொண்டனர் மேலும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story