விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மஞ்சுவிரட்டு
Cuddalore King 24x7 |15 Jan 2025 3:34 PM GMT
குதிரை வாகனத்தில் சுப்பிரமணியர் எழுந்தருளி வீதி உலா
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மகா தீபாரதனைகளும் நடந்தது. அதனை தொடர்ந்து நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக உற்சவமூர்த்தி யான சுப்பிரமணியருக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர் மஞ்சுவிரட்டுக்கு செல்லும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
Next Story