பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்.

மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.
மதுரையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 75 வது வார்டு ஆண்டாள்புரம் பகுதியில் இன்று ( ஜன.15)நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர் மற்றும் மகளிருக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி மிசாபாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story