விருத்தாசலத்தில் பெண் பேராசிரியரின் மொப்பட் வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூபாய் இரண்டு லட்சம் பணம், ஒரு பவுன் நகை கொள்ளை

விருத்தாசலத்தில் பெண் பேராசிரியரின் மொப்பட் வண்டி பெட்டியில் வைத்திருந்த ரூபாய் இரண்டு லட்சம் பணம், ஒரு பவுன் நகை கொள்ளை
விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
விருத்தாசலம் ஆவடி ரோடு பாரதிநகரைச் சேர்ந்தவர்  எழிலரசன் மனைவி மாலதி (36). இவர் கொளஞ்சியப்பர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3- 9 - 2024 அன்று வீட்டில் இருந்த 5 1/2 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்துவிட்டு அதில் கிடைத்த ரூபாய் 2 லட்சத்து ஐந்தாயிரம் பணம் மற்றும் ஒரு பவுன் நகையை ஒரு கவரில் வைத்து தன்னுடைய மொப்பட் வண்டி பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று பெட்டியை திறந்த போது பெட்டி திறக்கவில்லை. உடன் பாரதி நகர் முனையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் சென்று திறந்து பார்த்தபோது அதில் இருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story