கஞ்சநாயக்கன்பட்டியில் விளையாட்டு போட்டியில் நடைபெற்றது

கஞ்சநாயக்கன்பட்டியில் விளையாட்டு போட்டியில் நடைபெற்றது
X
கஞ்சநாயக்கன்பட்டியில் விளையாட்டு போட்டியில் நடைபெற்றது
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகரில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கயிறு இழுத்தல், உறி அடித்தல், செங்கல் தூக்குதல் ஸ்லோ பைக் ரேஸ் என பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது; போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஹாட் பாக்ஸ், வானொலி, தூக்குவாளி போன்ற சமையல் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று லட்சுமி நகர் குடியிருப்பு சார்பில் ஐந்தாவது ஆண்டாக பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கயிறு இழுத்தல், உறி அடித்தல், ஸ்லோ பைக் ரேஸ், செங்கல் தூக்குதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என வயது வித்தியாசம் இன்றி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். லட்சுமி நகர் பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க இந்த விளையாட்டுப் போட்டிகளை கண்டு ரசித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிபன் பாக்ஸ், வானொலி, கடாய், தூக்குவாளி, ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது. திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் பரிசுகள் வழங்கினார். தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற இந்த விளையாட்டு விழா போட்டிகளில் லட்சுமி நகர் பொதுமக்கள் ஏராளமான ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது
Next Story