கோவை: பெண் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு !

கோவை: பெண் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு !
X
சிவகாமி (48) நேற்று முன் தினம் இரவு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி, மாசணியம்மன் அவென்யூவைச் சேர்ந்த கணேசன் (52) என்பவரின் மனைவி சிவகாமி (48) நேற்று முன் தினம் இரவு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணேசன் காய்கறி வாங்கச் சென்று திரும்பிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால், வீட்டில் இல்லாத மனைவியை தேடிச் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் தண்ணீர் தொட்டி மூடி திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொட்டியில் பார்த்த போது, சிவகாமி விழுந்து கிடந்ததை கண்டு அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிவகாமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாமி தற்செயலாக விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story