கோவை: ஏடிஎம் பேட்டரி திருட்டு !

X
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஏடிஎம் பராமரிப்பு ஊழியர் ரமேஷ் குமார் (43), ஆவாரம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகிலுள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து இரண்டு பேட்டரிகள் திருடுபோனதாக பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், செங்காடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (48) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story

