குடும்பம் முக்கியம் கார் விபத்து ஏற்பட்ட இடத்தில் பொது மக்களுக்கு சாலை விதிகள் பற்றி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

X
அரியலூர் ஜன.16-- அரியலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடத்தில் போக்குவரத்து விதிகள் குறித்து கார் விபத்து நடந்த இடத்தில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜெயங்கொண்டம் கீழ குடியிருப்பு அருகே கார்கள் விபத்து ஏற்பட்ட இடத்தில் குடும்பம் முக்கியம் என பொதுமக்களிடம் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் கீழ குடியிருப்பு அருகே விருத்தாசலம் சாலையில் கார்கள் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் வாகன ஓட்டிகள் இடம் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் கீழ குடியிருப்பு அருகே வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பொதுமக்கள் யாராக இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும் வாகனத்திற்கு காப்பு சான்று அவசியம் இருத்தல் வேண்டும், இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஏறிச் செல்லுதல் கூடாது, இருசக்கர வாகனத்தில் ஓட்டிச் செல்லும் போது அவசியம் திரும்பும் முன் இண்டிகேட்டர் போட வேண்டும் சைக்கிள்களில் செல்வதாக இருந்தால் எந்த திசையில் செல்கிறோம் என்பதற்கான கை சைகை செய்ய வேண்டும். முக்கியமாக வாகனம் ஓட்டும் போது மது அருந்தி வாகனம் ஓட்டுதல் கூடாது, தங்களது பிள்ளைகளிடம் பேருந்தில் செல்வதற்காக பேருந்திற்கு கூட்டமாக ஓடிச்சென்று பேருந்தில் முண்டியடித்து ஏறக்கூடாது மேலும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி பிள்ளைகள் பலமுறை தவறி விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை தவிர்க்க வேண்டும் மற்றவர்கள் படியில் நின்றால் கூட பெற்றோர்களாகிய நீங்கள் படியை விட்டு பேருந்தில் உள்ளே செல்ல அறிவுறுத்த வேண்டும். அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் மற்றவர்களுக்கும் சாலை விதிகள் பற்றி விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் குடும்பம் முக்கியம் உங்களுக்காக உங்கள் குடும்பம் காத்திருக்கிறது இதனை கருத்தில் கொண்டு அனைவரும் அவசியம் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story

