உடையார்பாளையத்தில் திருவள்ளுவர் தின விழா

X
அரியலூர், ஜன.16- உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பாக 2056 ஆவது திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்குறள் வாழ்த்து பாடல்பாடி தொடங்கப்பட்டது. திருக்குறள் ஞானமன்ற தலைவர் பேராசிரியர் தஸ்தகீர் தலைமை வகித்தார். செயலாளர் புலவர் விஸ்வநாதன் வரவேற்றார். திருகுறள்உரையாசிரியர் எம். ஆர். இரகுநாதன், பேராசிரியர் இராஜசேகர், பேராசிரியர் அபுல்பாசல், பாவேந்தன் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புவிருந்தினராக உடையார் பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு திருக்குறள் எழுதும் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் திருக்குறள் புத்தகம் சான்றிதழ் வழங்கி உலகபொதுமறை திருக்குறளை அனைவரும் படித்து அதன் வழி நடக்கவேண்டும் என அறிவுறுத்தினர் அரசு , மேலும் தமிழக அரசு கன்னியாகுமரியில் நடத்திய விழாவில் திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் பன்னிர்செல்வத்திற்கு திருக்குறள் தகைமையாளர் விருது, தொகை முதலமைச்சர் கையால் பெற்றதை நிகழ்வில்பாராட்டி சிறப்புசெய்யப்பட்டது, மேலும் திருக்குறள் பறப்புரையாளர் சங்கிதாகண்ணன் கலந்து கொண்டு திருக்குறள் வாழ்க்கையில் ஓர்அங்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், நிகழ்வில் ஆசிரியர்கள் தமிழாசிரியர் இராஜேந்திரன், பத்மா, கலைச்செல்வி, ஹரிசுந்தரராஜன், மாரிமுத்து லயன் பாபு, இரவிஆசிரியர் கவுன்சிலர் பிரபாகர், சங்கர், தமிழழகன், அருண், பரணிதரன் மற்றும் தமிழ் ஆர்வளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர், முடிவில், தமிழாசிரியர் இராமலிங்கம் நன்றி கூறினார்.
Next Story

