வேலை வாய்ப்பற்றோர்க்கு உதவி தொகை ஆட்சியர் தகவல்

X
தர்மபுரி மாவட்ட சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசின் சார்பில், படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதன் படி மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத வர்களுக்கு ₹200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்களுக்கு 300ம், மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) படித்தவர்களுக்கு 400ம், பட்டதாரிகளுக்கு 600ம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600ம், மேல் நிலைக் கல்வி தேர்ச்சி பெற்ற வர்களுக்கு 750ம் பட்டதாரிகளுக்கு 1000-ம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்வரும் மார்ச் 31ம்தேதி யுடன் முடிவடையும் காலாண்டிற்கு தகுதியு டைய படித்த பதிவுதாரர்கள் வேலை வாய்ப்பற் றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங் கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண் டும். மாற்றுத்திறனாளி கள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். பட்டியலின பிரிவினருக்கு கடந்த 1ம்தேதி அன்று 45 வய தும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது.விண்ணப்ப தாரரின் குடும்பவருமா னம் ஆண்டிற்கு 72 ஆயிரத்திற்கு மிகையாமல் இருக்க வேண்டும். மாற் றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்ச வரம்பு இல்லை.இந்த உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும் பும் தகுதியுடைய பதிவுதாரர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற் றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வரும் பிப்ரவரி 25ம்தேதிக்குள் விண்ணப்பத்தை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளித்திட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Next Story

