விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கி பாராட்டு!

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் வழங்கி பாராட்டு!
X
பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசு வழங்கி பாராட்டினார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகளை அமைச்சருமான கீதா ஜீவன் உத்தரவிட்டார் அதன்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட சின்னக்கண்ணுபுரம் பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி திருவிழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் காளிதுரை, மகளிரணி நிர்வாகி மாரிச்செல்வி, வட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், பழனிக்குமார்,வட்ட இளைஞரணி கண்ணன்,மோகன்,சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story