இளம் தொழில்முறை வல்லுநர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இளம் தொழில்முறை வல்லுநர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
X
மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுநர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்தகவல்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பல்வேறு அரசு திட்டங்களின் விவரங்களை சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட உள்ளது. மேற்படி அலகில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு கணிப்பொறி அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் பட்டப்படிப்பு, தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (4 ஆண்டுகள் பட்டப்படிப்பு மட்டுமே) அல்லது கணிப்பொறி அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடர்புடைய முதுநிலை பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்படி பணிக்கு வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுதிறன், தரவு பகுப்பாய்வில் தேர்ச்சி, தன்னிச்சையாகவும், குழுவுடனும் இணைந்து பணிப்புரியும் திறன் ஆகியவை கட்டாயம். மேற்படி பணியில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணிக்கானகல்வித் தகுதி,அனுபவம், விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்கள் https://virudhunagar.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான தங்கள் விண்ணப்பத்தினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது புள்ளிஇயல் துணை இயக்குநர், மாவட்டப் புள்ளிஇயல் அலுவலகம், மாவட்டஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அல்லது நேரிலோ 23.01.2025 மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. குhலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story