ஆண்டாள் திருக்கல்யாண முளைப்பாரி வழிபாடு

ஆண்டாள் திருக்கல்யாண முளைப்பாரி வழிபாடு
X
குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண முளைப்பாரி வழிபாடு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரியில் உள்ள பாண்டுரங்கர் கோவிலில் மார்கழி முதல் நாள் தொடங்கி  ஆண்டாள் பெருமாளை சேர நோன்பு இருக்கிறார். இதற்கு பாவை நோன்பு எனப்படும். தை முதல் நாளில் ஆண்டாள் திருகல்யாணம் நடக்கிறது. இதற்காக கல்யாண நாளுக்கு 11 நாட்கள் முன்பு பெண்கள் முளைப்பாரியிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடி,  சுவாமிகளை வணங்கி வருவார்கள். ஆண்டாள் திருகல்யாணம் முடிந்த பின், இந்த முளைப்பாரியை காவிரி ஆற்றுக்கு எடுத்து சென்று, சிறப்பு வழிபாடுகள் நடத்தி, காவிரியில் விட்டு வருவது வழக்கம். அது போல் முளைப்பாரியை மேள தாளங்கள் முழங்க பெண்கள் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு கொண்டு சென்று, கும்மியடித்து,  சிறப்பு வழிபாடு நடத்தி, காவிரி நீரில் விட்டு வந்தனர்.
Next Story