ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி இருவர் காயம்

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி இருவர் காயம்
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி இருவர் காயம் புளியம்பட்டி காவல் நிலைய பகுதி கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சிலர் ஆம்னி வேனில் சென்றுள்ளனர். டிரைவர் அசோகா (40) வேணை ஒட்டிச் சென்றுள்ளார். சாமி தரிசனம் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் புளியம்பட்டி - சத்தி ரோட்டில் புது ரோடு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து ரோட்டோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் உயிரிழந்தார். காயமடைந்த ரகு, ரங்கசாமி இருவரையும் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.
Next Story